This translation may not reflect the changes made since 2014-04-05 in the English original.
Please see the Translations README for information on maintaining translations of this article.
குனு உரிமங்களின் மீறல்கள்
This page is maintained by the Free Software Foundation's Licensing and Compliance Lab. You can support our efforts by making a donation to the FSF. Have a question not answered here? Check out some of our other licensing resources or contact the Compliance Lab at licensing@fsf.org.
நீங்கள் குனு உரிமங்களின் மீறல்களை பார்த்தால் GPL, LGPL, AGPL, or FDL, நீங்கள் முதலில் செய்ய வேண்டுவது, பின்வரும் தகவல்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்
- அந்த வழங்கல் உரிமத்தின் நகலை கொண்டுள்ளதா?
- எந்த மென்பொருள் உரிமத்தின் கட்டுபாட்டிற்குள் வருகிறது என தெளிவாக கூறுகிறதா? ஏதேனும் மென்பொருள் உரிமத்தினால் கட்டுப்படாத பொது, கட்டுப்படுவதாக தவறான தகவல் தருகிறதா?
- மென்பொருளின் மூல நிரலிகள் அந்த வழங்கலுடன் தரப்பட்டுள்ளதா?
- மூல நிரலுக்கான எழுதப்பட்ட உறுதிமொழி இரும வடிவிலான நிரலுடன் தரப் பட்டுள்ளதா?
- தரப்பட்டுள்ள மூல நிரல் முழுமையானதா அல்லது பிற கட்டுண்ட நிரலின் கூறுகளை சுட்டுவதா?
உரிமை மீறல்கள் உண்மையிலேயே இருப்பதாக தெரிந்தால், நீங்கள் செய்ய வேண்டியது பின்வரும் விவரங்களை சரியாக குறித்துக்கொள்ள வேண்டும்:
- அந்த படைப்பின் துல்லியமான பெயர்
- அதனை விநியோகிக்கும் நபர் அல்லது அமைப்பின் பெயர்
- விநியோகிப்பவர்களின் மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ளும் ஏனைய வழிகள்
- எந்த பொதியின் உரிமம் மீறப்பட்டிருக்கிறதோ அந்த பொதியின் பெயர்
- உரிமம் எவ்வாறு மீறப்பட்டிருக்கிறது
- உரிமையாளரின் காப்புரிமம் சேர்க்கப்பட்டுள்ளதா
- மூல நிரல் முழுவதுமே காணப்படவில்லையா?
- மூல நிரலுக்கான எழுதப்பட்ட உறுதிமொழி ஏதேனும் வகையில் முழுமையாக இல்லையா?தவறான அஞ்சல் முகவரி அல்லது இணையதள முகவரி இடம் பெற்று இருப்பதன் மூலம் இது சாத்தியம்.
- நிரலின் காப்புரிமத்தின் நகல் நிரலின் விநியோகத்துடன் தரப்பட்டுள்ளதா?
- தரப்பட்டுள்ள மூல நிரலில் ஏதேனும் ஒரு பகுதி இல்லையா? அப்படியெனில் எந்த பகுதி.
நீங்கள் எந்த அளவிற்கு மேற்கண்ட தகவல்களை கொண்டுள்ளீர்களோ, அந்த அளவிற்கு காப்புரிமையின் உரிமையாளருக்கு மேற்கொண்டு செயல்படுவது எளிதாக இருக்கும்
நீங்கள் இந்த தகவல்களை திரட்டிய பின், எந்த பொதியின் காப்புரிமை மீறப்படுள்ளதோ அதன் உரிமையாளருக்கு துல்லியமான தகவல் அனுப்பிட வேண்டும். ஏனெனில் காப்புரிமையாலரே சட்டப்படி காப்புரிமையை நிறுவுவதற்கு, நடவடிக்கை எடுக்கும் உரிமை உள்ளவர்
காப்புரிமையாளர், கட்டற்ற மென்பொருள் கழகமாக இருக்கும் பட்சத்தில், தங்களது தகவலை கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிடவும்.<license-violation@gnu.org>. நாங்கள் மேலும் தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள, உங்களை தொடர்பு கொள்ள வேண்டியது முக்கியம். ஆகவே தாங்கள் அடையாளமற்ற மின்னஞ்சல் அனுப்பிடும் மென்பொருள் பயன்படுத்தினால், ஏதேனும் தொடர்புகளுக்கான வழிகளை தரவும். தங்களுடனான எங்களது தகவல் தொடுர்புகளை மறையாக்கி பயன்படுத்த விரும்பினால், ஒரு மின்னஞ்சலில் தெரிய படுத்தவும். நாங்கள் அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறோம்
ஆனால் எங்களிடம் காப்புரிமை இல்லாத போது, நாங்கள் தனிச்சையாக நடவடிக்கை எடுக்க இயலாது. ஆகவே காப்புரிமை மீறல்கள் குறித்து தெரிவிக்கும் முன் அந்த காப்புரிமையின் உரிமையாளர் யார் என தெரிந்து கொள்வது நலம்.